நேற்று இரவு 9.30 மணிக்கு கர்நாடக ஆளுநர் ஆட்சி அமைக்க வருமாறு தனிப்பெரும் கட்சியான பாஜகவின் சட்டமன்றக் கட்சித் தலைவர் எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்தார். ஏற்கனவே நேற்று பகலில், ‘ஆளுநர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தால் நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்’ என்று மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி தெரிவித்திருந்தார்.
இரவு 11.30
சொன்னாற்போல நேற்று இரவு 11.30 க்கு உச்ச நீதிமன்றப் பதிவாளரை நாடிய காங்கிரஸ் -மஜத தலைவர்கள், ‘நாளை காலை 9 மணிக்கு எடியூரப்பாவை பதவியேற்க அழைத்திருக்கிறார் கர்நாடக ஆளுநர். இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. உடனடியாக தடை விதிக்க வேண்டும். நாங்கள் மெஜாரிட்டியோடு ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், தனிப்பெரும் கட்சியான பாஜகவை மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது சட்ட விரோதம்’’என்று காங்கிரஸ் -மஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 👉