பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 2015 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 1,65,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘கடன் சார்ந்த மானிய உதவித் திட்டத்தின் மூலம் 2015-18 காலகட்டத்தில் 1,65,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.3,559 கோடி மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 2008 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் செயல்படுத்தப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் கீழ் 18,166 பேர் மட்டுமே பயனடைந்திருந்த நிலையில், கடன் சார்ந்த மானிய உதவித் திட்டத்தில் 1.65 லட்சம் பேர் பயனடைந்துள்ளது இத்திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதை உறுதி செய்கிறது.
கடன் சார்ந்த மானிய உதவித் திட்டத்துக்கு ரூ.31,505 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதோடு, இந்த நிதியாண்டில் கூடுதல் பட்ஜெட் மூலதனத் திட்டத்தின் மூலம் ரூ.25,000 கோடி கூடுதல் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் பட்ஜெட் மூலதனத்தின் கீழ், ஒதுக்கப்பட்ட நிதியானது தேவைக்கேற்ப பல்வேறு கட்டங்களாக நிதியாண்டு முழுவதும் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில், கடன் சார்ந்த மானிய உதவித் திட்டத்திற்கு ரூ.1,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நிர்ணயிக்கப்பட்ட ரூ.25,000 கோடியைவிடக் கூடுதல் பட்ஜெட் மூலதனத் திட்டத்தின் மூலம், நிதி பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக