போர் நிறுத்தம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

போர் நிறுத்தம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

போர் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், எல்லையில் இனி துப்பாக்கிச் சூடு நடத்தமாட்டோம் என இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

ரமலான் பண்டிகையை ஒட்டி இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்நிறுத்தம் அமலில் உள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி இந்திய எல்லைகளில் தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய ராணுவ வீரர்களும் அப்பாவி பொதுமக்களும் பலியாகினர்.

இதையடுத்து, இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்துவருகிறது. இப்படி மாறி மாறித் தாக்குவதனால் பலியாகும் உயிர்களின் எண்ணிக்கைதான் அதிகரிக்கிறது.

சமீபத்தில், மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ”அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இருந்தால், இந்தியா மறுக்காது. அண்டை நாடுகளுடன் நல்ல உறவை வளர்த்துக்கொள்ளவே விரும்புகிறோம். ஆனால் அதற்கு பாகிஸ்தான் மட்டுமே முன்னெடுப்பைத் தொடங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, இருநாட்டு ராணுவ செயல்பாட்டுப் பிரிவு இயக்குநர் ஜெனரல்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

2003ஆம் ஆண்டின் போர் நிறுத்த ஒப்பந்தம் முழு மூச்சாகக் கடைபிடிக்கப்படும்; எல்லையில் தகராறு ஏற்பட்டால் உடனடியாக ஹாட் லைன் தொலைபேசி மூலமோ, பேச்சுவார்த்தை மூலமோ, அதிகாரிகள் மூலமோ பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here