உலக அளவில் அதிக மக்கள்தொகை உடைய நகரங்கள் பட்டியலில், டெல்லி 2028ஆம் ஆண்டுக்குள் முதலிடம் பிடிக்கும் என ஐநா ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நகரமயமாக்கல் குறித்த ஆய்வறிக்கையை ஐநா பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, ‘உலக மக்கள்தொகையில், 55 சதவிகிதத்தினர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். 2050இல், இந்த எண்ணிக்கை, 68 சதவிகிதமாக உயர வாய்ப்பு உள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.
மக்கள்தொகை அதிகரித்துவரும் நகரங்கள் உடைய நாடுகளின் பட்டியலில் இந்தியா, சீனா மற்றும் நைஜீரியா முன்னிலையில் உள்ளன. வரும் 2050இல் நகர்ப்புற மக்கள்தொகை எண்ணிக்கை இந்தியாவில் 41 கோடியாக உயரக்கூடும். தற்போது, மக்கள்தொகை அதிகமுள்ள நகரங்கள் பட்டியலில் ஜப்பானின் டோக்கியோ 3.7 கோடியுடன் முதலிடத்திலும், இந்தியாவின் டெல்லி 2.9 கோடியுடன் இரண்டாமிடத்திலும் உள்ளன. மூன்றாவது இடத்தில் சீனாவின் ஷாங்காய் நகரம் உள்ளது. வரும், 2028இல் டெல்லியில் வசிக்கும் மக்கள்தொகை எண்ணிக்கை 3.7 கோடியாக அதிகரித்து முதலிடத்தைப் பிடிக்கும். மேலும் 2020ஆம் ஆண்டுக்குள் டோக்கியோவின் மக்கள்தொகை குறைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் 2028ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக டெல்லி இருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக