❇சென்னை அணி அசத்தல் வெற்றி* 🏏புனே: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.  இந்தியாவில் நடக்கும் 11வது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. புனேயில் நடந்த கடைசி லீக் போட்டியில் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறிவிட்ட சென்னை அணி, பஞ்சாப் அணியை எதிர் கொண்டது. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி 'பவுலிங்' தேர்வு செய்தார். சென்னை அணியில் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

❇சென்னை அணி அசத்தல் வெற்றி* 🏏புனே: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.  இந்தியாவில் நடக்கும் 11வது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. புனேயில் நடந்த கடைசி லீக் போட்டியில் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறிவிட்ட சென்னை அணி, பஞ்சாப் அணியை எதிர் கொண்டது. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி 'பவுலிங்' தேர்வு செய்தார். சென்னை அணியில்

🏏புனே: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 
இந்தியாவில் நடக்கும் 11வது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. புனேயில் நடந்த கடைசி லீக் போட்டியில் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறிவிட்ட சென்னை அணி, பஞ்சாப் அணியை எதிர் கொண்டது. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி 'பவுலிங்' தேர்வு செய்தார். சென்னை அணியில் வாட்சனுக்குப்பதில் டுபிளசி இடம் பிடித்தார். பஞ்சாப் அணியில் யுவராஜ், ஸ்டாய்னிஸ் நீக்கப்பட்டு கருண் நாயர், மில்லர் வாய்ப்பு பெற்றனர்.

*🎾லுங்கிடி அசத்தல்*

🏏பஞ்சாப் அணிக்கு துவக்கத்திலேயே 'வேகங்கள்' தொல்லை தந்தனர். லுங்கிடி பந்தில் கெய்ல் டக்-அவுட்டானார். சகார் பந்தில் பின்ச் (4) ஆட்டமிழந்தார். லோகேஷ் ராகுல் 7 ரன்களில் திரும்பினார். ஜடேஜா 'சுழலில்' மனோஜ் திவாரி (35) சிக்கினார். மில்லர் 24 ரன்களில் அவுட்டானார். லுங்கிடி 'வேகத்தில்' அஷ்வின், ஆண்ட்ரூ டை டக்-அவுட்டாகினர். கருண் நாயர் (54) அரை சதம் கடந்தார். முடிவில், பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 153 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. சென்னை சார்பில் அதிகபட்சமாக லுங்கிடி 4 விக்கெட் வீழ்த்தினார்.

*🎾ரெய்னா அரை சதம்*

🏏சென்னை அணிக்கு ராயுடு (1), டுபிளசி (14) நிலைக்கவில்லை. ராஜ்புட் பந்தில் பில்லிங்ஸ் டக்-அவுட்டானார். அஷ்வின் 'சுழலில்' ஹர்பஜன் (19) ஆட்டமிழந்தார். மூன்று சிக்சர் விளாசிய சகார் 39 ரன்கள் எடுத்தார். அபாரமாக விளையாடிய ரெய்னா அரை சதம் கடந்தார். தோனி ஒரு சிக்சர் பறக்கவிட, சென்னை அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரெய்னா (61), தோனி (16) அவுட்டாகாமல் இருந்தனர்.
'பிளே-ஆப்' சுற்றில் ராஜஸ்தான்* வரும் 22ல் மும்பையில் நடக்கவுள்ள முதல் தகுதிச்சுற்றில் ஐதராபாத்- சென்னை அணிகள் மோதுகின்றன. 23ல் கோல்கட்டாவில் நடக்கவுள்ள 'எலிமினேட்டரில்' கோல்கட்டா அணி ராஜஸ்தானை எதிர் கொள்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here