கர்நாடக மாநிலத்தின் 23வது முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா_* பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் 23வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியாக 104 இடங்களை வென்ற பா.ஜனதாவை புதிய ஆட் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கர்நாடக மாநிலத்தின் 23வது முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா_* பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் 23வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியாக 104 இடங்களை வென்ற பா.ஜனதாவை புதிய ஆட்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் 23வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியாக 104 இடங்களை வென்ற பா.ஜனதாவை புதிய ஆட்சி அமைக்க வரும்படி ஆளநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார். இதை ஏற்று புதிய முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஜெ.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், அனந்த்குமார், சதானந்தா கவுடா ஆகியோர் பங்கேற்றனர். பதவியேற்பு விழா நடைபெற்ற ஆளுநர் மாளிகை முன்பு பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வந்தே மாதம் என்றும், மோடி மோடி என்றும் கூச்சலிட்டு கொண்டாடினர்.
 
பாஜ-104, காங்கிரஸ்-78, மஜத 38, சுயேச்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். கர்நாடகாவில் தனித்து ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை. ஆனால் தனிப்பெரும் கட்சியாக வென்ற பாஜ 104 இடங்களை மட்டுமே பிடித்ததால் ஆட்சி அமைக்கக்கூடிய பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இருப்பினும் அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக இருக்கும் பாஜவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். அதற்காக ஒருவாரம்  கால அவகாசம் வழங்க வேண்டும் என்று ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் மாநில பாஜ தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தலைமையில் பாஜ நிர்வாகிகள் நேற்று முன்தினம் கடிதம் கொடுத்தனர்.

அதே சமயத்தில் அரசியலில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் திடீரென கூட்டணி அமைத்தன. இதைத்தொடர்ந்து எச்.டி.குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் முடிவு செய்து நேற்று முன்தினம் ஆளுநர் வஜூபாய் வாலாவை கூட்டாக சந்தித்து ஆட்சி அமைக்க  அழைக்கும்படி கடிதம் கொடுத்தனர். தங்களுக்கு 117 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் கர்நாடகாவில் புதிய ஆட்சி அமைப்பது யார் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. 

இந்தநிலையில் எடியூரப்பாவை முதல்வராக பதவி ஏற்க வரும்படி ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். அவர் எடியூரப்பாவுக்கு அனுப்பிய கடிதத்தில்,’ பா.ஜனதா சட்டமன்ற கட்சி தலைவராக நீங்கள் தேர்வு செய்யப்பட்ட கடிதத்தை மே 16ம் தேதி என்னை சந்தித்து அளித்தீர்கள். மேலும் மே 15ம் தேதி புதிய ஆட்சி அமைக்க அழைக்கும்படி உரிமை கோரும் கடிதமும் உங்கள் சார்பில் என்னிடம் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு கர்நாடகாவில் புதிய அரசை அமைக்க வரும்படி உங்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். 

பதவி ஏற்பதற்கான நேரம் மற்றும் இடத்தை நீங்கள் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும் சட்டப்பேரவையில் உங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் முதல்வராக பதவி ஏற்ற நாளில் இருந்து அடுத்த 15 நாட்களுக்குள் இதுதொடர்பான நடைமுறையை முடிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கவர்னரின் அழைப்பை தொடர்ந்து எடியூரப்பா இன்று காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் கர்நாடகாவின் புதிய முதல்வராக பதவி ஏற்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here