மருத்துவப் படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வு(நீட்) கடந்த மே 6ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் மூன்று லட்சம் மாணவர்கள் எழுதினர். இதில் ஒரு லட்சம் மாணவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த தேர்வுக்கான விடைத்தாள் இன்று www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் மே 27ஆம் தேதி மாலை 5 மணி வரை விடைத்தாளை மாணவர்கள் பார்த்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால், பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஒவ்வொரு சரியான பதிலுக்கும் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். தற்போது, வெளியிடப்பட்டுள்ள விடைத்தாளில் மாணவர்களுக்கு ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் கட்டணமாக ரூ.1,000 செலுத்தி முறையீடு செய்யலாம். இவை அனைத்தும் இணையதளம் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும். நீட் தேர்வு முடிவுகளை ஜூன் 5ஆம் தேதியன்று வெளியிட வாய்ப்புள்ளதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக