நீட் தேர்வு பயண தூரத்தில் சீனா - வட கொரியா இடையே 3 முறை போகலாம் - வரைபட விளக்கம் ஒரு தமிழக மாணவர் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூருக்கு நீட் தேர்வு எழுத செல்லும் தூரத்திற்கு, இரண்டு முறை கனடாவில் இருந்து அமெரிக்கா சென்று மீண்டும் கனடா திரும்பலாம். - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நீட் தேர்வு பயண தூரத்தில் சீனா - வட கொரியா இடையே 3 முறை போகலாம் - வரைபட விளக்கம் ஒரு தமிழக மாணவர் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூருக்கு நீட் தேர்வு எழுத செல்லும் தூரத்திற்கு, இரண்டு முறை கனடாவில் இருந்து அமெரிக்கா சென்று மீண்டும் கனடா திரும்பலாம்.


மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களுக்கு கட்டாய நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, இந்தியா முழுவதும் நாளை நடக்க உள்ளது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தமிழத்தின் முயற்சி தோல்வியில் முடிந்தது. தற்போது மேலும் ஒரு இடியாகப் பல தமிழக மாணவர்களுக்கு, ராஜஸ்தான், கேரளா, சிக்கிம் போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.


சேலத்தை சேர்ந்த ஒரு மாணவர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள தேர்வு மையத்திற்குச் சாலை வழியாக சென்றால் 2,232 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். சென்னையில் இருந்து வான் வழியாக செல்ல வேண்டும் என்றால், சேலத்தில் இருந்து சாலை வழியாக 339 கிலோ மீட்டர் பயணித்து சென்னை வர வேண்டும். பிறகு சென்னையில் இருந்து 1,606 கிலோ மீட்டர் வான் வழியாக பயணித்து ஜெய்பூர் செல்ல வேண்டும். இதற்கு கிட்டதட்ட 2,000 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும்.

அதே போல சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவர் சிக்கிம் மாநிலத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு 2,343 கிலோ மீட்டர் பயணித்து செல்ல வேண்டும்.

இந்தியா பரப்பளவில் மிகப்பெரியா நாடாக இருப்பதால், சராசரியான இந்த 2,000 கிலோ மீட்டர் என்பது ஒரே நாட்டிற்குள் இருக்கிறது. இதுவே உலகின் வேறு பகுதிகளில் 2,000 கிலே மீட்டர் பயணம் என்பது பல நாட்டு எல்லைகளைக் கடக்கும் பயணமாக இருக்கும்.

தமிழகத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கும், சிக்கிம் தலைநகர் கேங்டாக்கிற்கு பயணம் செய்யும் தூரத்தை வேறு சில நாடுகளில் இருந்து மேற்கொள்ளும் பயணமாக இருந்தால், அது எப்படி இருக்கும்? சில எடுத்துக்காட்டுகள்:

கனடா நாட்டின் தலைநகரான ஒட்டாவாவில் இருந்து, அமெரிக்காவின் தலைநகர் நியூயார்க்கிற்கு 540 கிலோ மீட்டர். ஒரு தமிழக மாணவர் ராஜஸ்தான் செல்லும் தூரத்திதில், இரண்டு முறை ஒட்டாவாவில் இருந்து நியூயார்க் சென்று திரும்பலாம்.

வட கொரியாவின் தலைநகரான பியாங்காங்கில் இருந்து சீனத் தலைநகர், பெய்ஜிங்கிற்கு 808 கிலோ மீட்டர். சீனாவில் இருந்து இரண்டு மணி நேர விமானப் பயணத்தில் பியாங்யாங் சென்றுவிடலாம். சென்னையில் இருந்து கிக்கிம் சென்றால் 2,343 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். ஆனால், 2,424 கிலோ மீட்டரில் பெய்ஜிங்கில் இருந்து பியாங்யாங் சென்று திரும்பி மீண்டும் ஒரு முறை பியாங்யாங் சென்றுவிடலாம்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் ஹம்பர்க் நகரத்திற்கு 1,800 கிலோ மீட்டர் பயணத்தில் சென்றுவிடலாம். அதே போல், 1808 கிலோ மீட்டரில் சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்றுவிடலாம்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து, ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டுக்கு 1,263 கிலோ மீட்டர் தூரம். சென்னையில் இருந்து சிக்கிம் செல்லும் தூரம், லண்டனில் இருந்து மாட்ரிட் சென்று மீண்டும் லண்டன் திரும்பும் தூரத்துக்கு சமம்.

இந்தியத் தலைநகர் டெல்லியில் இருந்து செளதி அரேபியாவின் தலைநகரான ரியாத்திற்கு 3051 கிலோ மீட்டர். இந்தியாவில் இருந்து பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளை கடந்து செளதி அரேபியாவிற்கு செல்ல வேண்டும். சென்னையில் இருந்து ஜெய்ப்பூருக்குச் சென்று நீட் தேர்வு எழுதிவிட்டு மீண்டும் சென்னை வந்து சேரும் தூரம் இது.

பிரேசில் நாட்டின் தலைநகர் பிரசிலாவில் இருந்து, அர்ஜண்டீனா தலைநகர் ப்யூனோஸ் அயர்சுக்கு செல்லும் தூரமும், சென்னையில் இருந்து சிக்கிம் செல்லும் தூரமும் கிட்டத்தட்ட சமம்.

தென் ஆஃப்ரிக்க தலைநகரான கேப்டவுனில் இருந்து, ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவுக்கு 2,180 கிலோ மீட்டர். இடையில் போஸ்ட்வானா என்ற நாட்டைக் கடந்து செல்லவேண்டும். இது சென்னையில் இருந்து ஜெய்ப்பூர் செல்லும் தூரம்.

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவுக்கு விமானத்தில் பயணித்தால் 1,120 கிலோ மீட்டர். சென்னையில் இருந்து ஜெய்பூருக்கு விமானத்தில் பயணித்தால் 1600 கிலோ மீட்டர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here