*📚📚 பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: மே 31 முதல் விண்ணப்பிக்கலாம்* *பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு வரும் வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது. விண்ண - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*📚📚 பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: மே 31 முதல் விண்ணப்பிக்கலாம்* *பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு வரும் வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது. விண்ண

*பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு வரும் வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க ஜூன் 4-ஆம் தேதி கடைசி நாளாகும்*

*பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 28 முதல் ஜூலை 6 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது*

*இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மே 31-ஆம் தேதி முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்*

*🔴🔴தேர்வுக் கட்டணம்*

*இந்தத் தேர்வுக்கு ரூ. 125 தேர்வுக் கட்டணத்துடன், ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ. 175 கட்டணத்தைச் செலுத்த வேண்டும்*

*தேர்வறை அனுமதிச் சீட்டை ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். தேர்வு மைய விவரங்கள் தேர்வறை அனுமதிச் சீட்டில் இடம் பெற்றிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது*

*தேர்வு கால அட்டவணை*

ஜூன் 28 - தமிழ் முதல் தாள்

ஜூன் 29 - தமிழ் இரண்டாம் தாள்

ஜூன் 30 - ஆங்கிலம் முதல் தாள்

ஜூலை 2 - ஆங்கிலம் இரண்டாம் தாள்

ஜூலை 3 - கணிதம்

ஜூலை 4 - அறிவியல்

ஜூலை 5 - சமூக அறிவியல்

ஜூலை 6 - விருப்ப மொழிப் பாடம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here