கேரளாவில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் விரைவில், குழந்தைநல அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கேரள மாநில அரசு, சிறுவர் மற்றும் சிறுமியருக்கு எதிரான குற்றங்களை உடனடியாக விசாரித்து முடிவெடுக்க, அனைத்துக் காவல் நிலையங்களிலும், குழந்தைநல அலுவலர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கேரளக் காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, “நாட்டில் சிறுவர் மற்றும் சிறுமியருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அவர்களைப் பாதுகாப்பது நம் கடமை. இந்த நிலையில், சிறுவர் மற்றும் சிறுமியருக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரின் வழக்குகளை விசாரிக்க, மாநிலத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும், விரைவில், குழந்தைநல அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்” என்றார்.
இந்தப் பதவியில் பெண்களே நியமிக்கப்பட உள்ளனர். குழந்தைநல அலுவலர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக