சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு ரிசல்ட்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு ரிசல்ட்!


சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 29) மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளது என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி முடிவடைந்தது. இந்தத் தேர்வை மொத்தம் 16 லட்சம் மாணவர்கள் எழுதினர். பத்தாம் வகுப்பு கணக்கு வினாத்தாள் வெளியானதாகச் சர்ச்சை எழுந்தது. சிபிஎஸ்இ தேர்வு நடத்தும்முறை குறித்து பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. இதற்கு மறுதேர்வும் வைக்கவில்லை.

இந்த நிலையில், இன்று மாலை 4 மணிக்கு சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, results.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு தேர்வு முடிவுகளைப் பார்த்துக் கொள்ளலாம்.

சமீபத்தில், சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது, அதில் முதல் மூன்று இடங்களிலும் மாணவிகள் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011 முதல் 2017 வரை ஏழு ஆண்டு காலமாகப் பத்தாம் வகுப்புத் தேர்வு கட்டாய பொதுத் தேர்வாக நடத்தப்படவில்லை. மாணவர்கள் விரும்பினால் பொதுத் தேர்வாகவும், இல்லாவிட்டால் பள்ளி அளவிலான வருடாந்திரத் தேர்வாகவும் எழுதிக்கொள்ளலாம். இந்த ஆண்டிலிருந்து, கட்டாய பொதுத் தேர்வாக மாற்றப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here