60,000 பேருக்கு வேலைவாய்ப்பளித்த பல்புகள்! எல்.இ.டி. பல்புகள் விநியோகத் திட்டத்தின் கீழ் இதுவரையில் நாடு முழுவதும் 30 கோடி எல்.இ.டி. பல்புகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மின் சிக்கனத்தை வலியுறுத்தும் விதமாகக் குண்டு பல்புகள் பயன்பாட்டை குறைத்திட எல்.இ.டி. பல்புகள் விநியோகத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடியால் உஜாலா திட்டம்  - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

60,000 பேருக்கு வேலைவாய்ப்பளித்த பல்புகள்! எல்.இ.டி. பல்புகள் விநியோகத் திட்டத்தின் கீழ் இதுவரையில் நாடு முழுவதும் 30 கோடி எல்.இ.டி. பல்புகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மின் சிக்கனத்தை வலியுறுத்தும் விதமாகக் குண்டு பல்புகள் பயன்பாட்டை குறைத்திட எல்.இ.டி. பல்புகள் விநியோகத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடியால் உஜாலா திட்டம் 



மின் சிக்கனத்தை வலியுறுத்தும் விதமாகக் குண்டு பல்புகள் பயன்பாட்டை குறைத்திட எல்.இ.டி. பல்புகள் விநியோகத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடியால் உஜாலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தைக் கொண்டு இதுவரையில் 30 கோடி எல்.இ.டி. பல்புகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன என்று ஆற்றல் திறன் சேவைகள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

இதுகுறித்து இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 'இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இதுவரையில் 30 கோடி எல்.இ.டி. பல்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளதால் 38,952 மில்லியன் கிலோ வாட் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது. ரூபாய் மதிப்பீட்டில் ரூ.15,581 கோடி சேமிக்கப்பட்டுள்ளது' இந்தத் திட்டத்தின் மூலமாக 2005ஆம் ஆண்டு முதல் 2030ஆம் ஆண்டு வரையிலான காலத்திற்கு இடைப்பட்ட பகுதியில் 33 விழுக்காடு முதல் 35 விழுக்காடு வரை காற்றில் கார்பன் அளவு குறைக்கப்படும் என்று ஒன்றிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆற்றல் திறன் சேவைகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சவ்ரப் குமார் ’தி எக்கனாமிக் டைம்ஸ்’ ஊடகத்திடம் பேசுகையில், "எல்.இ.டி. பல்புகளுக்கான கொள்முதல் மற்றும் விநியோகத்திற்கு இந்தியா நிலையான முயற்சிகள் எடுத்து வருகிறது. இதன்மூலம் சர்வதேச எல்.இ.டி. சந்தையில் இந்தியாவின் பங்கு 12 விழுக்காடாக அதிகரித்துள்ளது. முன்னதாக இதன் பங்கு 0.1 விழுக்காடாக மட்டுமேயிருந்தது. அதேபோல உள்நாட்டில் எல்.இ.டி. பல்புகள் ஊடுருவல் 0.4 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இது உஜாலா திட்டத்தின் பயனால் அதிகரித்துள்ளது. தற்போது உள்நாட்டில் எல்.இ.டி. பல்புகள் உற்பத்தி ஆண்டுக்கு 6 கோடியாக அதிகரித்துள்ளது. முன்னதாக இதன் எண்ணிக்கை 30 லட்சமாக இருந்தது. இதன்மூலம் 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here