தன் கையே தனக்கு உதவி’ என்று வாழ்ந்தவர் மாணவர்களின் ஆராய்ச்சிக்காக 91 வயது மூதாட்டி உடல் தானம்* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தன் கையே தனக்கு உதவி’ என்று வாழ்ந்தவர் மாணவர்களின் ஆராய்ச்சிக்காக 91 வயது மூதாட்டி உடல் தானம்*

திருப்போரூர் தெற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ராஜாம்பாள் (91). இவரது கணவர் ரத்தினம். இவர், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு  இறந்து விட்டார். தம்பதிக்கு குழந்தையில்லை.

கணவனை இழந்த ராஜாம்பாள் மாடுகளை வளர்த்து வீடு வீடாக சென்று பால் வியாபாரம் செய்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.

தற்போது, முதுமையின் காரணமாக வீட்டில் இருந்தபடியே தொழிலை  தொடர்ந்து செய்து வந்தார்.

இவருக்கு குழந்தை இல்லாததால் ஜெயலட்சுமி என்ற  உறவினர் பெண்ணை தத்தெடுத்து வளர்த்து, அவருக்கு திருமணம் செய்து வைத்தார்.  அவரும் குடும்பத்துடன் திருப்போரூர் பகுதியிலேயே வசித்து  வருகிறார்.

உறவினர்கள் இருந்தும் கடைசி வரை உழைத்து வாழ வேண்டும் என்ற  நோக்கத்தில் ராஜாம்பாள் மட்டும் தனியாகவே வசித்து வருமானம் ஈட்டி வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அரிமா சங்கம் மூலம், ‘‘தான் இறந்தால் தனது சடலத்தை  மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக கொடுத்து விட வேண்டும்’’ என்று கூறி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பதிவு செய்து கொடுத்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் ராஜாம்பாள் திடீரென  இறந்தார்.

ராஜாம்பாளின் இறப்பு செய்தியை அறிந்த திருப்போரூர் அரிமா சங்கத்தினர்  அவரது  விருப்பத்தின்படி உடலை தானமாக பெற முன் வந்தனர். ராஜாம்பாளின் வளர்ப்பு  மகள் மற்றும் அவரது உறவினர்களும் இதற்கு ஒப்புக்கொண்டனர்.

அதன்படி, அவரது உடல் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

90 வயதைக் கடந்தும் உறவினர்கள் தயவின்றி தன் உழைப்பால் வாழ்ந்து சாதித்து காட்டியதோடு, தனது உடலையும் மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக கொடுத்த மூதாட்டியின் செயலை கண்டு திருப்போரூர் பகுதி மக்கள் கண்ணீருடன்  பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here