அரசு பள்ளியில் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அக்கறையோடு சேர்த்தால் மகிழ்ச்சியாக இருக்கும்’ என்று செங்கோட்டையன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள முருகன்புதூரில் சாலை விரிவாக்க பணியை துவக்கி வைத்த பின் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:
அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் அரசு ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் சிறப்பு திட்டம் எதுவும் தமிழக அரசிடம் இல்லை.
ஏற்கனவே அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அதிகளவு ஊக்கத்தை தந்து கொண்டுதான் இருக்கிறோம்.
இதுவரை அரசு பள்ளி ஆசிரியர்கள் எவ்வளவு பேர் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளனர் என்ற விபரம் எங்களிடம் இல்லை.
அவர்களிடம், அரசு பள்ளியில்தான் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என வற்புறுத்த முடியாது.
அவர்களே அக்கறையோடு தங்கள் பிள்ளைகளை சேர்த்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
இந்த ஆண்டு அரசு பள்ளியில் கூடுதலாக ஒரு லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்ற புள்ளி விபரம் கிடைத்துள்ளது.
அதேபோன்று அரசு பள்ளியில் சேர்த்தால் செல்போன், 10 ஆயிரம் தரப்படும் என்ற தகவல் பொய்யானவை.
இந்த ஆண்டு 3 ஆயிரம் அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள், 468 கோடி மதிப்பீட்டில் 9 முதல் 12ம் வகுப்பு வரையில் இணையதள கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக