பிறந்த நாள் கொண்டாட்டத்தைத் தவிர்த்த முதல்வர்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பிறந்த நாள் கொண்டாட்டத்தைத் தவிர்த்த முதல்வர்!


தனது 64ஆவது பிறந்த நாளை நேற்று கடந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொண்டாட்டங்கள் எதுவுமின்றி தனது வழக்கமான பணிகளில் ஈடுபட்டார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றுடன் 64ஆவது பிறந்த நாளை கடந்தார். ஆனால், இதற்காக அதிமுக சார்பில் கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. மாறாக முதல்வர் தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டார். நேற்று தனது சொந்த மாவட்டமான சேலத்தில் இருந்த முதல்வர், ஏற்காட்டில் கோடை விழாவைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஜெயலலிதா 70ஆவது பிறந்த நாள் வளைவு அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

ஏற்காடு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன், துரைக்கண்ணு ஆகியோர் முதல்வருக்குப் பூங்கொத்து கொடுத்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் முதல்வருக்கு போனில் தொடர்புகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கிண்டியில் நேற்று நடைபெற்ற செவிலியர் தின விழாவில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல்வருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு, "செவிலியர்களுக்கு தனி பல்கலைக்கழகம் அமைக்கும் அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பிறந்த நாள் பரிசாக அறிவிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

ஜெயலலிதா பிறந்த நாளை அதிமுகவினர் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவர். அன்றைய தினம் அவருக்குப் பல்வேறு தலைவர்களும் நேரில் வாழ்த்துகள் தெரிவிப்பர். ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வழிபாடும், அன்னதானங்களும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் சிறப்பாக செய்திருப்பார்கள். ஆனால், தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்து தனது வழக்கமான பணிகளில் ஈடுபட்டுள்ளது பொதுமக்களிடையே ஆச்சர்யத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here