மின் வசதிகள் அளிப்பதில் இந்தியா மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பதாக உலக வங்கி பாராட்டியுள்ளது.
இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’சர்வதேச அளவில் மின் வசதிகள் வழங்குவதில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 85 விழுக்காட்டினருக்கு மின் வசதி கிடைத்துள்ளது. ஆண்டுக்கு 3 கோடி மக்களுக்கு மின் வசதி அளிக்கும் நாடாக இந்தியா விளங்குகிறது. மற்ற நாடுகளில் ஆண்டுக்கு 3 கோடி பேருக்கு மின் வசதிகள் புதிதாக வழங்கப்படுவதில்லை’ என்று கூறியுள்ளது.
இதுகுறித்து உலக வங்கியின் மூத்த ஆற்றல் பொருளாதார நிபுணர் விவியென் ஃபோஸ்டர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், " எஞ்சியுள்ள 15 விழுக்காடு மக்களுக்கு மின் வசதிகள் வழங்கும் பணியையும் இந்தியா சவாலுடன் எதிர்கொண்டுள்ளது. இந்தியாவில் 12.5 கோடி பேருக்கு மின் இணைப்புகள் வழங்க வேண்டியுள்ளது. இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ள 2030ஆம் ஆண்டுக்கு முன்பாகவே இந்த இலக்கை அடைந்துவிடும்" என்று கூறியுள்ளார். கடந்த வாரத்தில் இந்தியா அனைத்துக் கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கிவிட்டதாகப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்ததையடுத்து இந்த அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக