பெண்களுக்கு அதிகாரமளிப்போம்! உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் முன்னணியில் உள்ள இந்தியா, தனது நாட்டுப் பெண்களைச் சரியாக நடத்தினால் மேன்மேலும் சிறப்பாகச் செயல்படும். பெண்களுக்குச் சரிசமமான  - சுனீரா டண்டன் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பெண்களுக்கு அதிகாரமளிப்போம்! உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் முன்னணியில் உள்ள இந்தியா, தனது நாட்டுப் பெண்களைச் சரியாக நடத்தினால் மேன்மேலும் சிறப்பாகச் செயல்படும். பெண்களுக்குச் சரிசமமான  - சுனீரா டண்டன்



பெண்களுக்குச் சரிசமமான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் மட்டும் இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 770 பில்லியன் டாலரைச் சேர்த்துக்கொள்ள முடியும் என்று மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிட்யூட் ஏப்ரல் 23ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர் சக்தியின் பெண்களின் பங்கை அதிகரித்தல், பணிகளில் பெண்கள் செலவிடும் நேரத்தை அதிகரித்தல், அதிக உற்பத்தித் திறன் கொண்ட துறைகளில் பெண்களைச் சேர்த்துக் கொள்ளுதல் போன்ற முயற்சிகளால் இந்தியாவின் பொருளாதாரம் அத்தகைய வளர்ச்சியை எட்ட முடியும் என்று மெக்கின்சி நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பு வெறும் 18 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. உலகளவில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பை மிகக்குறைவாகக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. ஆனால், இந்தியாவின் தொழிலாளர் சக்தியிலோ பெண்களின் பங்களிப்பு 25 சதவிகிதமாக உள்ளது. பாலின சமநிலையை மேம்படுத்துவதன் மூலம் இந்தியப் பொருளாதாரம் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இரண்டாவது பெரிய ஆற்றல் வளம் கொண்டதாக உருவெடுக்கும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வதன் மூலம் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 45 லட்சம் கோடி டாலர் சேர்த்துக் கொள்ள முடியும் என்று மெக்கின்சி நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் ஆண்கள் அனுபவிக்கும் சலுகைகளையும், உரிமைகளையும் பெண்கள் அனுபவிப்பதில்லை. ஆண் பிள்ளைகளை மட்டும் பெற்றுக் கொள்ளவும், வளர்க்கவும் விரும்பும் மக்களால் பாலின விகிதம் நாசமாகிவிட்டது. மேலும், பெண் குழந்தைகளுக்கு இருக்கும் வளங்களும் பிழியப்பட்டுவிட்டன. அரசின் சமீப பொருளாதார சர்வேயின் முடிவுகளின் படி, இந்தியாவில் இன்றளவில் 2.1 கோடி ‘தேவையற்ற பெண்கள்’ உள்ளனர். மெக்கின்சியின் அறிக்கையில், “கலாசார நெறிகள் பெண்களுக்கான சமத்துவத்துக்கு எதிராக இன்னும் போரிடுகின்றன” என்று கூறப்பட்டுள்ளது.

இது நாட்டின் நான்கு முக்கிய அளவுருக்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவை, சமமான வேலை வாய்ப்புகள், சேவைகள் பெறுவதற்கான வசதி, பாதுகாப்பு, சட்டம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியன ஆகும். இந்த நான்கு அளவுருக்களின் அடிப்படையில் வெளியிடப்பட்ட ஆசியப் பிராந்தியத்துக்கான 18 நாடுகள் அடங்கிய தரவரிசைப் பட்டியலில் இந்தியா கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

மெக்கின்சியின் அறிக்கையில், “தொழிலாளர் சக்தியில் ஆண் பெண் பங்கெடுப்பு விகிதம், கர்ப்பகால உயிரிழப்பு, நிதி மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கம், பிறப்பின்போது உள்ள பாலின விகிதம், பெண்களுக்கு எதிரான வன்முறை போன்றவற்றில் ஆசியப் பிராந்தியத்தில் மற்ற நாடுகளுக்கு நிகராக உருவெடுக்க இந்தியா நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

பணிகளினால் மட்டுமல்ல, பணிகளின் தரத்தாலும் இந்தியாவின் பெண்கள் பயனடையக்கூடும். இந்தியாவில் உள்ள பெண் பணியாளர்களில் 97 சதவிகிதப் பேர் அமைப்புசாரா துறையில் செயல்படுவதாக மெக்கின்சியின் ஆய்வறிக்கை கூறுகிறது. இவர்கள் குறைவான சம்பளம் வழங்கப்படும் பணிகளிலும் வீட்டுக்குரிய வேலைகளிலும் ஈடுபடுவதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கையில், “பெண்களின் பணியின் தரத்தையும் ஊதியத்தையும் மேம்படுத்துவதற்கும், பெண்களின் நலனை உறுதி செய்வதற்கும் முன்னுரிமை அளிப்பது அவசர தேவையாக உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், சில நல்ல செய்திகளும் உள்ளன. கல்வி மற்றும் மகப்பேறு நலன் போன்ற பகுதிகளில் பாலின சமநிலையை மேம்படுத்துவதில் கடந்த பத்தாண்டுகளில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. மெக்கின்சியின் அறிக்கையில், “பாலின சமநிலையை மேம்படுத்தும் பாதையில், தன்னுடைய அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளை விடவும் இந்தியா முன்னிலையில் உள்ளது. ஆனால், பணி மற்றும் சமூகத்தில் உள்ள பாலின சமத்துவத்தில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் சராசரியை விட இந்தியா பின்தங்கி உள்ளது” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here