இந்தியாவின் மேலாண்மைப் பட்டதாரிகள் சோப் மற்றும் சலவை சோப் விற்பனையிலேயே ஆர்வம்காட்டுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வெளியேறும் மேலாண்மை பட்டதாரிகளில் பெரும்பாலானவர்கள் வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் உற்பத்தி நிறுவனங்களிலேயே பணிபுரிய விரும்புவதாக நீல்சன் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 36 தொழிற்கல்விக் கல்லூரிகளைச் சேர்ந்த 1,100 மேலாண்மைப் பட்டதாரிகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மே 21ஆம் தேதியன்று ஆய்வு முடிவுகள் வெளியாகியது. நீல்சன் இந்தியா நிறுவனத்தின் தலைமை இயக்குநரான சஞ்சய் பால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’கடந்த சில ஆண்டுகளாக வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் உற்பத்தித் துறை ஆரோக்கியமான வளர்ச்சி விகிதத்தில் வளர முடியாமல் இருந்து வருகிறது. இத்துறையில் பணிபுரிய அதிகமான மாணவர்கள் விருப்பம் காட்டுகின்றனர்’ என்று தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டில் இந்தியாவின் வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் சந்தையின் மதிப்பு 104 பில்லியன் டாலரை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில், உலகில் அதிகமாக நுகரும் பொருளாதாரங்களில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியவே மேலாண்மை பட்டதாரிகள் விரும்பினர். ஆனால் இந்த ஆண்டில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மீதான ஆர்வம் குறைந்துள்ளது. மேலும், இந்திய நிறுவனங்களை விட வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியவே மாணவர்கள் அதிக விருப்பம் காட்டுகின்றனர் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக