பாதுகாப்புத் துறைக்கு அதிகமாகச் செலவிடும் உலகின் ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று ஸ்டாக்ஹோல்ம் ஆய்வறிக்கை கூறியுள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனமான ஸ்டாக்ஹோல்ம் இதுகுறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பாதுகாப்புத் துறைக்கு அதிகம் செலவிடும் உலகின் முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாகப் பாதுகாப்புத் துறைக்குச் செலவிடப்படும் தொகையின் மதிப்பு 1.73 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் ஜிடிபியில் 2.2 விழுக்காடு கூடுதலாகும். ஆனால், டெல்லியிலிருந்து பாதுகாப்புத் துறைக்குச் செலவிடப்படும் தொகை 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் இந்தியா 63.9 பில்லியன் டாலர்களைப் பாதுகாப்புத் துறைக்கு செலவிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் பாதுகாப்புத் துறைக்கு அதிகம் செலவு செய்த நாடாக அமெரிக்கா உள்ளது. அந்த நாடு 610 பில்லியன் டாலர்களை 2017ஆம் ஆண்டில் செலவிட்டுள்ளது. 228 பில்லியன் டாலர்களைச் செலவிட்டு சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. பிராந்திய ரீதியாகப் பார்த்தால் பாதுகாப்புத் துறைக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதிலும் ஆசியா முன்னிலையில் உள்ளது. ஆசியப் பிராந்தியத்தில் சீனா மற்றும் இந்தியாவை அடுத்து சவூதி அரேபியா பாதுகாப்புத் துறைக்கான செலவுகளை வேகமாக அதிகரித்து வருகிறது. இதில் பெய்ஜிங் நகரிலிருந்து செலவிடப்பட்ட தொகை அந்நாட்டு ஜிடிபியில் 13 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இது 2008ஆம் ஆண்டில் 5.8 விழுக்காடாக மட்டுமேயிருந்தது’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக்கொண்டு ராணுவச் செலவுகளை அதிகரித்துவருவதால் இரு நாடுகளுக்கும் இடையே மட்டுமின்றி, பிராந்திய அளவிலான பதற்றத்தையும் அதிகரிக்கச் செய்வதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக