மின்னலை முன்னரே கண்டறியும் தொழில்நுட்பம்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மின்னலை முன்னரே கண்டறியும் தொழில்நுட்பம்!


ஒடிசாவில் இடி மின்னல் தாக்குவதை முன்கூட்டியே அறியும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இருப்பதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஒடிசாவில் இடி மின்னல் தாக்கி உயிரிழப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து பேசிய தலைமைச் செயலர் ஏ.பி.பதி, ‘மின்னல் தாக்குதலை முன்கூட்டியே அறிந்துகொள்ள பயன்படுத்தப்படும் இந்தத் தொழில்நுட்பம் சில மாநிலங்களில் நன்றாகவே செயல்படுகிறது. அதனால், இதை நமது மாநிலத்திலும் பயன்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்தத் தொழில்நுட்பம் மூலம் நமது மாநிலத்துக்கான பயன்பாடு மற்றும் பொருந்தும் தன்மை குறித்து ஆய்வு செய்து இடி மின்னலிருந்து மக்களைக் காக்க முடியும்’ எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து ஒடிசா விண்வெளி மையத்தின் தலைமை நிர்வாகி சந்தீப் திரிபாதி கூறுகையில், ‘சூப்பர் சென்சார்கள் மூலம் மின்னல் தாக்கும் பகுதிகளை சுமார் 30 முதல் 45 நிமிடங்களுக்கு முன்கூட்டியே அறிந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க முடியும்’ என கூறினார்.

இதுமட்டுமல்லாமல், நவீன ராடர் கருவிகள் மூலம் மின்னல் தாக்கும் பகுதியைக் கண்டறிந்து ரேடியோ, தொலைக்காட்சி மற்றும் செல்பேசி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் மூலம் புயல் காற்று, வெள்ளம் போன்றவற்றையும் முன்கூட்டியே அறிய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில் 2017ஆம் ஆண்டு மின்னல் தாக்கியதில் 450க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here