*🔴🔴 ரஷிய கல்விக் கண்காட்சி: சென்னையில் நாளை தொடக்கம்* ரஷிய கல்விக் கண்காட்சி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*🔴🔴 ரஷிய கல்விக் கண்காட்சி: சென்னையில் நாளை தொடக்கம்* ரஷிய கல்விக் கண்காட்சி

ரஷிய கல்விக் கண்காட்சி சென்னையில் சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெற உள்ளது.

இதுகுறித்து ரஷிய அறிவியல் கலாசார மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கா சாலையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் மே 19 , 20 ஆகிய தேதிகளில் ரஷிய கல்விக் கண்காட்சி நடைபெற உள்ளது.

இதில் மருத்துவம், பொறியியல் கல்வியைக் கற்பிக்கும் 10 -க்கும் மேற்பட்ட முன்னணி ரஷிய அரசு கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

ரஷியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு சி.இ.டி., ஐ.இ.எல்.டி.எஸ். போன்ற தகுதித் தேர்வுகள் எதையும் மாணவர்கள் எழுதத் தேவையில்லை.

ஆனால், இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிப்படி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மருத்துவம் படிக்க விரும்புவோர் நீட் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here