இந்தியாவின் பிரபலமான தனியார் பெரு வர்த்தக நிறுவனங்களில் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் தலைமைப் பணிகளுக்கு நியமிக்கப்படுவதில் மிகப்பெரிய அளவில் பாரபட்சம் நிலவுவதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
இதுகுறித்து வெளியான பியூ ரிசர்ச் சென்டர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 'இந்தியாவின் பிரபலமான வர்த்தக நிறுவனங்களில் தலைமைப் பணிகளில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே நிறைந்துள்ளனர். தலைமைப் பொறுப்புகளில் இருக்கும் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கான ஊதியமும் குறைவாகத்தான் உள்ளது. சுமார் 500 நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரிகளாக 5 விழுக்காடு பெண்கள் மட்டுமே உள்ளனர்' என்று கூறப்பட்டுள்ளது.
அதிக ஊதியம் வாங்கும் பெண் தலைமை நிர்வாக அதிகாரியாக பெப்சிகோ நிறுவனத்தின் இந்திரா நூயி விளங்குகிறார். இவர் 25.9 மில்லியன் டாலர்களை ஊதியமாக வாங்குகிறார். ரியல் எஸ்டேட் நிறுவனமான இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் வெண்டாஸ் தலைமை நிர்வாக அதிகாரி தேப்ரா கேஃப்ரோ 25.3 மில்லியன் டாலர்களை ஊதியமாகப் பெறுகிறார். மூன்றாவது இடத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பார்ரா உள்ளார். இவர் 21.1 மில்லியன் டாலர்களை ஊதியமாகப் பெறுகிறார்.
சராசரி ஊதிய உயர்வைப் பெறுவதில் ஆண்களை விடப் பெண்களே முன்னிலையில் உள்ளனர். கடந்த ஆண்டில் ஆண் தலைமை நிர்வாக அதிகாரிகள் சராசரியாக 8.2 விழுக்காடு ஊதிய உயர்வைப் பெற்றிருந்த நிலையில் பெண் தலைமை நிர்வாக அதிகாரிகள் 15.4 விழுக்காடு ஊதிய உயர்வைப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் அதிக ஊதிய உயர்வைப் பெற்ற பெண் தலைமை நிர்வாகிகளில் இந்திரா நூயி முதலிடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக அதிக ஊதிய உயர்வைப் பெற்றவர்கள் வரிசையில் இவர் 18ஆவது இடத்தில் உள்ளார்.
பட்டியலிடப்பட்ட 500 நிறுவனங்களில் கடந்த ஆண்டில் 27 பெண் தலைமை நிர்வாக அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். முந்தைய ஆண்டில் இவர்களின் எண்ணிக்கை 24 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக