*🎯🎯முன்னுரிமையற்ற குடும்ப அட்டையை முன்னுரிமை அட்டையாக மாற்ற முடியுமா?* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*🎯🎯முன்னுரிமையற்ற குடும்ப அட்டையை முன்னுரிமை அட்டையாக மாற்ற முடியுமா?*

முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளை முன்னுரிமை அட்டையாக மாற்ற முடியுமா என்பது குறித்து தமிழக அரசுத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், நகர்ப்புறங்களில் உள்ள குடும்ப அட்டைகளில் 37.79 சதவீத அட்டைகள் முன்னுரிமை குடும்ப அட்டைகளாக இருக்கலாம் எனவும், கிராமப்புறங்களில் உள்ள அட்டைகளில் 62.55 சதவீத அட்டைகள் முன்னுரிமை குடும்ப அட்டைகளாக இருக்கலாம் எனவும் மத்திய அரசு வரையறை செய்துள்ளது.

யார் யாருக்குக் கிடைக்கும்?:

முன்னுரிமை குடும்ப அட்டைகள் வறியவர்களிலும் வறியவர்களுக்கு வழங்க உணவு பாதுகாப்புச் சட்டம் வகை செய்கிறது.

குடிசைப் பகுதிகளில் வசிப்போர், நடைபாதைகளில் வசிப்போர், நரிக்குறவர், திருநங்கைகள், முதியோர் ஓய்வூதியம் பெறுவோர், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வசிப்போர், விவசாய கூலித் தொழிலாளர், விதவை மற்றும் திருமணமாகாத பெண்களை தலைவராகக் கொண்ட குடும்பம், அனைத்து அந்தியோதயா அன்னயோஜனா குடும்பங்கள், முன்னுரிமை குடும்ப அட்டை பெறத் தகுதியானவர்கள் என மத்திய அரசு வகைப்பாடு செய்துள்ளது.

என்ன செய்யலாம்?:

நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் முன்னுரிமை குடும்ப அட்டைக்குப் பதிலாக, முன்னுரிமையற்ற குடும்ப அட்டை வழங்கப்பட்டிருந்தால் அது குறித்து என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

உண்மையிலேயே வறியவரிலும் வறியவராக உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே முன்னுரிமை குடும்ப அட்டை அளிக்க வேண்டும். அவர்களுக்கு தவறுதலாக முன்னுரிமையற்ற குடும்ப அட்டை வழங்கப்பட்டிருந்தால், அது குறித்து புகார் மனு அளிக்கலாம். இதைத் தொடர்ந்து, அந்த மனுவின் அடிப்படையில் உரிய கள ஆய்வு நடத்தப்படும்.

உண்மை நிலை கண்டறிந்து தகுதியின் அடிப்படையில் முன்னுரிமையற்ற குடும்ப அட்டை, முன்னுரிமை குடும்ப அட்டையாக மாற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னுரிமையற்ற குடும்ப அட்டைக்கும், முன்னுரிமை குடும்ப அட்டைக்கும் இப்போது பொருள்கள் வழங்கப்பட்டாலும், உணவு பாதுகாப்புச்
சட்டத்தின்படி, முன்னுரிமை குடும்ப அட்டைக்கே பொருள்கள் வழங்குவதில் மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவது
குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here