விமான நிலையத்திலிருந்து முதலில் வெளியே வந்த வைகோ, காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.
வைகோ கார் புறப்பட்டுச் சென்றதும், சீமானை வரவேற்க வந்திருந்த காரை நாம் தமிழர் கட்சியினர் அந்த இடத்தில் நிறுத்தினர். இதனால் மதிமுக-நாம் தமிழர் என இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு மோதல் உருவானது. கம்புகளால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் பலருக்கு மண்டை உடைந்து. மோதலில் மயங்கி விழுந்த நாம் தமிழர் கட்சி தொண்டர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட இந்த மோதலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக மதிமுக-நாம் தமிழர் கட்சியினரிடையே பிரச்னை இருந்து வருகிறது. சீமானைத் தொடர்ந்து வைகோ விமர்சனம் செய்து வருகிறார். தனது மருமகன் சரவண சுரேஷ் தீக்குளித்து உயிரிழந்ததற்குக் காரணம் நாம் தமிழர் கட்சியினர் போட்டே மீம்ஸ்தான் என்றும் வைகோ குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக