குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை!


குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனி விமானம் மூலமாக இன்று தமிழகம் வருகிறார். அவரது வருகையையொட்டி விமான நிலையத்தில் ஏழு அடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவியேற்ற பிறகு இரண்டாவது முறையாக இன்று (மே 4) தமிழகம் வருகிறார். இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வரும் ராம்நாத் கோவிந்த், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

டெல்லியில் காலை 8.05 மணிக்குப் புறப்பட்டு காலை 10.45 மணிக்குத் தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர், ஹெலிகாப்டர் மூலமாக வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்குச் செல்கிறார். அதன் பின்னர் மதியம் 12:30 மணிக்கு வேலூர் சி.எம்.சி மருத்துவமனை நூற்றாண்டு தொடக்க விழாவில் பங்கேற்கும் அவர், நாராயணா மருத்துவமனையில் ரூ.10 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவையும் தொடங்கி வைக்கிறார். பின்னர் மாலை 5 மணிக்குத் தனி ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் சென்னை வருகிறார்.

பின்னர் சனிக்கிழமையன்று, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் வேளச்சேரி குருநானக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் நடைபெறும் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார். இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் தமிழக ஆளுநரும் பங்கேற்க உள்ளார். அங்கிருந்து மதியம் 1.25 மணிக்குத் தனி விமானம் மூலம் புறப்பட்டு மாலை 4.10 மணிக்கு டெல்லி சென்றடைகிறார்.

குடியரசுத் தலைவர் வருகை காரணமாக வேலூரில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் குடியரசுத் தலைவர் பயணத்துக்காக பெங்களூரிலிருந்து நான்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here