மத்தியப் பிரதேச மாநிலத்தில் சாதி வகைப்பாடு சார்ந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியலைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், பொதுப் பிரிவினர் என்ற வகைப்பாட்டில் பிரித்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தமிழ் இணைய செய்திகள்
இது குறித்து மத்தியப் பிரதேச மேல்நிலைக் கல்வி வாரியத் தலைவர் எஸ்.ஆர்.மொகந்தி கூறுகையில், “மாணவர்கள் அரசு சலுகைகள் பெறுவதை எளிமையாக்குவதற்காகச் சாதி வகைப்பாடு சார்ந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம், மாணவர்கள் பல்வேறு திட்டங்களில் பயன் பெற முடியும். மத்தியப் பிரதேசக் கல்வி வாரியம் மட்டுமல்ல; இதுபோன்று பலரும் வெளியிடுகின்றனர். அரசுத் திட்டங்கள் மாணவர்களுக்கு எளிதில் சென்றடைய இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. இதை நாங்கள் பல ஆண்டுகளாகப் பின்பற்றிவருகிறோம்” எனக் கூறியுள்ளார்.தமிழ் இணைய செய்திகள்
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக