இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஒருவர் பறக்கும் ரோபோட்டை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவின் மும்பை நகரத்தைச் சேர்ந்த யோகேஷ் சுக்கிவத் என்பவர் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வருகிறார். இவர் அறிவியல் துறையில் சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து யோகேஷ் சுக்கிவத் கூறுகையில், “பூச்சி வடிவத்தில் இருக்கும் பறக்கும் ரோபோட் பல திறன்களை கொண்டது. அதாவது, பயிர்களின் வளர்ச்சி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். ரோபோட்டில் பொருத்தப்பட்டுள்ள சிறிய இறக்கை ரோபோட் பறப்பதற்கு உதவியாக இருக்கிறது. சிறிய அளவில் இருப்பதே இதனுடைய சிறப்பம்சம். குறைந்த செலவில் இந்த ரோபோட் உருவாக்கப்பட்டுள்ளது. இது லேசர் கற்றை ஆற்றல் மூலம் இயங்குகிறது. இதிலுள்ள எலெக்ட்ரானிக் கருவி லேசர் ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி, இறக்கைகளை பறக்க வைக்கிறது” என்றார்.
கனவாக இருந்த பறக்கும் ரோபோட் தற்போது உண்மையாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக