வருவாய்த் துறை சார்பில், ஜாதி, இருப்பிடம், வருமானம், கணவரால் கைவிடப்பட்டோர், முதல் பட்டதாரி சான்று, பட்டா மாறுதல் உத்தரவு உள்ளிட்டவை, 'ஆன்லைனில்' வழங்கப்பட்டு வந்தன.
சமீபத்தில் வாரிசு, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று, சொத்து மதிப்பு, ஓ.பி.சி., அடகு பிடிப்போர் உரிமம், பணம் கொடுப்போர் உரிமம், கலப்பு திருமணம், குடியிருப்பு, விவசாய வருமான சான்று உட்பட, 15 வகை சேவைகள், 'ஆன்லைனில்' இணைக்கப்பட்டன.
வாரிசு சான்றுக்கு விண்ணப்பிப்போர், இறந்தோரின் பெற்றோர், மகள்களை முறையாக இணைப்பதில்லை.
விடுபட்டோர் பெயரை சேர்க்கவோ, தேவையில்லாதோரை நீக்கவோ, 'சாப்ட்வேரில்' வழியில்லை. இதனால், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது.இதேபோல், மற்ற சான்றுகளிலும் சில குழப்பங்கள் உள்ளன.
இதனால் குறித்த காலத்தில் சான்று வழங்குவதில்லை என, புகார் எழுந்துள்ளது.வி.ஏ.ஓ.,க்கள் கூறுகையில், 'புதிய சேவைகள் அவசரகதியில் இணைக்கப்பட்டன.
இதற்கு, 'இ-சேவை' மைய ஊழியர்களுக்கோ, வி.ஏ.ஓ.,க்களுக்கோ முறையான பயிற்சி இல்லை. இதனால், சான்றுகள் வழங்குவதில் குழப்பம் நீடிக்கிறது' என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக