நகரங்களை ஸ்தம்பிக்க வைத்த விவசாயிகள்! விவசாயக் கடன் கடன் தள்ளுபடி, விவசாயிகளின் வருவாயை உறுதிப்படுத்துவது, குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேச விவசாயிகள் இன்று (ஜூன் 1) போராட்டத்தை தொடங்கினர். இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் ஏதும் நகரத்துச் செல்லாததால் நகர வாழ் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நகரங்களை ஸ்தம்பிக்க வைத்த விவசாயிகள்! விவசாயக் கடன் கடன் தள்ளுபடி, விவசாயிகளின் வருவாயை உறுதிப்படுத்துவது, குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேச விவசாயிகள் இன்று (ஜூன் 1) போராட்டத்தை தொடங்கினர். இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் ஏதும் நகரத்துச் செல்லாததால் நகர வாழ்

விவசாயக் கடன் கடன் தள்ளுபடி, விவசாயிகளின் வருவாயை உறுதிப்படுத்துவது, குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேச விவசாயிகள் இன்று (ஜூன் 1) போராட்டத்தை தொடங்கினர். இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் ஏதும் நகரத்துச் செல்லாததால் நகர வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தல் நேரத்தில் விவசாயிகளுக்கென அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஏதும் சரிவர நிறைவேற்றப்படவில்லை. இதனைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் விவசாயிகள் இன்று முதல் 10 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் 130 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய `ராஷ்டிரிய கிஸான் மகாசங்' அமைப்பின் கீழ் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக காய்கறிகள், பழங்கள், பால் ஆகிய அத்தியாவசிய பொருட்களின் நகர விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட `ராஷ்டிரிய கிஸான் மகாசங்' அமைப்பின் அமைப்பாளர் ஷிவ் குமார் சர்மா, "விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகள் எதுவும் அரசால் நிறைவேற்றப்படவில்லை. இது விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளாகும். அரசு உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால், விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "தற்போது இங்கிருந்து நகரங்களுக்குச் செல்லும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை நிறுத்தியுள்ளோம். கிராம விவசாயிகள் தினம் தினம் படும் துயரங்களை அவர்களிடத்தில் எடுத்துச் செல்லவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். இருப்பினும் நகரத்திலிருந்து யாரேனும் அத்தியாவசிய பொருட்களை நாடி எங்களிடம் வந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக உதவி செய்வோம்" என்றும் கூறியுள்ளார்.

தற்போது இந்தப் போராட்டத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக ஓராண்டுக்கு முன்னர் மன்ட்சூர் பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பலியான ஆறு விவசாயிகளின் மரணத்தைக் கண்டித்து இங்குப் போராட்டம் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here