டூத் பேஸ்ட்: பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

டூத் பேஸ்ட்: பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து!

மக்கள் தினமும் பயன்படுத்தும் முக்கியப் பொருளான பற்பசையில் பயன்படுத்தப்படும் ரசாயனத்தால், பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பொருட்களில் முக்கியமான ஒன்று, டூத் பேஸ்ட் எனப்படும் பற்பசை. முந்தைய காலகட்டத்தில் பல் துலக்க வேப்பம் குச்சி, உப்பு ஆகியவற்றைப் பயன்படுத்துவார்கள். அவை மறைந்து, இன்று அனைவருமே ரசாயனம் கலந்த டூத் பேஸ்ட்தான் உபயோகிக்கிறார்கள்.

டூத் பேஸ்ட் மற்றும் பார் சோப்புகளில், ட்ரைக்ளோசான் என்ற ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பு ரசாயனப் பொருள் காணப்படுகிறது. இது குடலில் பாதிப்பை ஏற்படுத்தி, பெருங்குடலில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு பற்றிய தகவல்கள் "அறிவியல் மொழிபெயர்ப்பு மருத்துவம்" என்ற இதழில் வெளியாகியுள்ளது.

‘ட்ரைக்ளோசான்’ என்ற ரசாயனப் பொருள் மக்கள் உபயோகிக்கும் சுமார் 2 ஆயிரம் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"இந்த ஆய்வின் முடிவுகளைப் பார்க்கும்போது, ட்ரைக்ளோசானால் குடல் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என்பது தெரியவருகிறது" என்று மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குடோங் ஜாங் தெரிவிக்கிறார்.

ட்ரைக்ளோசான் ரசாயனத்தை எலிகளின் உடலில் செலுத்தி ஆய்வு மேற்கொண்டபோது, எலிகளுக்குப் பெருங்குடல் புற்றுநோய் உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ட்ரைக்ளோசான் ரசாயனம் பெருங்குடலில் சுழற்சி மற்றும் அவை சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கி அதன் மூலம் புற்றுநோயாக மாறுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here