கிராம உதவியாளர்கள் பென்ஷன் : திருத்தம் கோரி வழக்கு! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கிராம உதவியாளர்கள் பென்ஷன் : திருத்தம் கோரி வழக்கு!

பணியில் இருக்கும்போது மரணமடைந்த கிராம உதவியாளர்களுக்குப் பணிக் கொடை வழங்கும் வகையில், தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் பென்ஷன் விதிகளில் திருத்தம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, ஏனாதவாடி கிராமத்தில் கிராம உதவியாளராகப் பணியாற்றியவர் சக்கரபாணி. இவர் 2011ஆம் ஆண்டு பணியில் இருந்தபோது மரணமடைந்தார்.

அவருடைய குடும்பத்தினருக்கு ஓய்வு கால பலன்களை வழங்கிய அரசு, பணிக் கொடையை வழங்கவில்லை. பணிக் கொடையை வழங்கக் கோரி சக்கரபாணியின் மனைவி எல்லம்மாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்குப் பதிலளித்த தமிழக அரசு, “பணியில் இருக்கும்போது இறந்த கிராம உதவியாளர்களுக்கு பணிக்கொடை வழங்குவதற்கு, தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் பென்ஷன் விதிகள் வழிவகை செய்யவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தது.

10 ஆண்டுகளுக்குக் குறைவாகப் பணியாற்றிய கிராம உதவியாளர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்குவது குறித்து அந்த விதிகளில் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் பதில் மனுவில் தெரிவித்திருந்தது.

இதை எதிர்த்து எல்லம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அதில், “பணியில் இருக்கும்போது மரணமடையும் கிராம உதவியாளர்களுக்கு பணிக் கொடை வழங்கும் வகையில் தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் பென்ஷன் விதிகளில் திருத்தம் செய்யத் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியுள்ளார்.

மேலும் தனது கணவருக்கு வழங்க வேண்டிய பணிக் கொடையை வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று (ஜூன் 1) விசாரித்த நீதிபதி டீக்காராமன், விசாரணையை ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here