படுகொலைக்கு முதல் நாள் நடந்த சதி: பாமக ராமதாஸ் பேச்சு சிவகங்கை சாதியப் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "இதற்காக முந்தைய நாளே சதித் திட்டம்” தீட்டப்பட்டதாக அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டுள்ளார். - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

படுகொலைக்கு முதல் நாள் நடந்த சதி: பாமக ராமதாஸ் பேச்சு சிவகங்கை சாதியப் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "இதற்காக முந்தைய நாளே சதித் திட்டம்” தீட்டப்பட்டதாக அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டுள்ளார்.



சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சுமன் உள்ளிட்ட அவர்களது கூட்டாளிகள் கடந்த 28ஆம் தேதி இரவு தேவேந்திரகுல மக்களின் வீடுகளில் புகுந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தக் கொலை வெறித் தாக்குதலில் சண்முகநாதன் , ஆறுமுகம், சந்திரசேகர் ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் வெட்டுக் காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நான்காவது நாளாக இன்று இறந்தவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்திற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜூன் 1) வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் கோவில் திருவிழா தொடர்பான முன்பகை காரணமாக ஒரு பிரிவினர் மீது அடுத்த கிராமத்தில் வசிக்கும் மற்றொரு தரப்பினர் நடத்திய தாக்குதலில் இறந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்திருக்கிறது. மனிதநேயமின்றி அரங்கேற்றப்பட்டுள்ள இந்தக் கொடூர படுகொலைகள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன; இவை கண்டிக்கத்தக்கவையாகும்.

கடந்த மே 28ஆம் தேதி இரவு கச்சநத்தம் கிராமத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்காக அதற்கு முந்தைய நாளே சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. இதற்காக இருபதுக்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் திரட்டப்பட்டிருக்கிறது. இதுகுறித்த உண்மைகளை உளவுப்பிரிவு மூலம் கண்டறிந்து இந்தப் படுகொலைகளை தடுக்கக் காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யத் தவறியதன் மூலம் காவல் துறை அதன் கடமையில் தோல்வியடைந்து விட்டது" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

"இந்தத் தாக்குதலில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்றுவந்த 5 பேரில் மூவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மீதமுள்ள இருவரையும் தனியார் மருத்துவமனைக்கு மாற்றி, அவர்களின் சிகிச்சைக்கான முழுச் செலவையும் அரசே ஏற்க வேண்டும். அது மட்டுமின்றி, கச்சநத்தம் பகுதியில் இனியும் மோதல் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, கச்சநத்தம் உட்பட இரு தரப்பு மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் சமூக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், பாதுகாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here