அடுத்த ஆண்டு மார்ச்சில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள், இன்று முதல் வரும், 30ம் தேதிக்குள் செய்முறை தேர்வுக்கு, பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டசெய்திக்குறிப்பு:
அடுத்தாண்டு, மார்ச்சில் நடக்கும் பொது தேர்வில் பங்கேற்க உள்ள, நேரடி தனித்தேர்வர்கள், மற்றும், 2012க்கு முன், பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி, அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்கள், செய்முறை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இதற்காக, முதலில் செய்முறை பயிற்சிவகுப்பில் சேர, பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து தனித்தேர்வர்களும், இன்று முதல், வரும், 30ம் தேதிக்குள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில், பதிவு செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்ப நகலை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஒதுக்கும் பள்ளிகளுக்கு சென்று, செய்முறை பயிற்சிவகுப்பில் பங்கேற்க வேண்டும்
.இதில், 80 சதவீதம் வருகை புரிந்த தனித்தேர்வர்கள் மட்டுமே, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில், 10ம் வகுப்பு தேர்வை எழுத முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக