தனியார் பள்ளிகளுக்கு தனி இயக்குனரகம்* தமிழக பள்ளி கல்வித்துறையில், 30 ஆண்டுகளுக்கு முன், மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் துவங்கப்பட்டது. மாவட்ட வாரியாக - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தனியார் பள்ளிகளுக்கு தனி இயக்குனரகம்* தமிழக பள்ளி கல்வித்துறையில், 30 ஆண்டுகளுக்கு முன், மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் துவங்கப்பட்டது. மாவட்ட வாரியாக


மாவட்ட வாரியாக, மெட்ரிக் ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டனர். தற்போது, பள்ளிக் கல்வித் துறையில், நிர்வாக சீர்திருத்தம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, மெட்ரிக் பள்ளிகளை, மெட்ரிக் இயக்குனரகத்தில் இருந்து மாற்ற, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டது.

இதற்காக, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மதுரை காமராஜர் பல்கலை முன்னாள் துணை வேந்தர், ஆளுடைய பிள்ளை தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது.இந்த குழு அறிக்கையில், அனைத்து வகை பள்ளிகளையும் இணைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டது.

அதன்படி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் கலைக்கப்பட்டு, 'தனியார் பள்ளிகள் இயக்குனரகம்' புதிதாக உருவாக்கப்பட உள்ளது.

இதன் கீழ், நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐ.சி.எஸ்.இ., மற்றும் சி.பி.எஸ்.இ., என, அனைத்து வகை தனியார் சுயநிதி பள்ளிகளும், இணைக்கப்பட உள்ளன.இதற்கான அரசாணை, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here