எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான மருத்துவ கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் முதல் 10 இடங்களை சிபிஎஸ்இ மாணவர்கள் பெற்றுள்ளனர்.
2018-19ம் ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
முதல் 10 இடங்களை பெற்றவர்கள் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு சுமார் 6,500 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கான கலந்தாய்வுக்கு ஜூன் மாதம் 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் விண்ணப்பம் வழங்கப்பட்டது.
28,067 விண்ணப்பங்களில் 25,417 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தனியார் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 19,280 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதில் 18,915 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மொத்தம் 44,332 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் பிரிவுக்கு ஜூலை 1ம் தேதியும், ஜூலை 2ம் தேதி முதல் 10ம் தேதி வரை பொதுப்பிரிவு கலந்தாய்வும் நடத்தப்படும்.
தரவரிசை பட்டியலை மாணவர்கள் மருத்துக்கல்வி இயக்ககத்தின் இணையதளங்களில் www.tnmedicalselection.org, www.tnhealth.org தெரிந்து கொள்ளலாம்.
ஒரு மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் விண்ணப்பிக்கலாம் என்று மற்ற மாநிலங்களில் இருந்தால் கூட, தமிழ்நாட்டில் விண்ணப்பித்த மாணவர் வேறு எங்கும் விண்ணப்பிக்க கூடாது என்ற விதி இருக்கிறது.
அந்த விதியை கடுமையாக பின்பற்றுவோம். இவ்வாறு கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
*சிபிஎஸ்இ மாணவர்கள் டாப்*
மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவரை விட சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களே நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர். அரசு ஒதுக்கீடு பிரிவின்கீழ் 5,449 பேர் சிபிஎஸ்இ மாணவர்கள் உள்ளனர்.
தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்கான மாணவர்களின் பட்டியலில் இடம்பெற்ற சிபிஎஸ்இ உள்பட பிற பாடத்திட்டங்களில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
*கலந்தாய்வில் வேலூர் சிஎம்சி*
கலந்தாய்வு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், சுயநிதி கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முதல் முறையாக வேலூர் சி.எம்.சி. மருத்துவக்கல்லூரியும் இணைக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக