இன்ஜினியரிங் கவுன்சிலிங் தரவரிசை பட்டியலில், முதலிடம்பெற்றவர்களில், ஐந்து பேர், வெளிமாநிலங்களிலும், ஐந்து பேர்,தமிழகத்திலும் படித்துள்ளனர்.
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த, 1.60 லட்சம் பேரில், சான்றிதழ் சரிபார்ப்பில், 1.04 லட்சம் பேர், தகுதிபெற்றுள்ளனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல், நேற்றுவெளியானது.
இதில், 200க்கு, 200 கட் ஆப் மதிப்பெண் பெற்ற, 'டாப்பர்ஸ்' பட்டியலில், 10 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த மாணவர்களில், அர்ஜுன் அஷோக், கணினி அறிவியல் பாடப்பிரிவில் படித்துள்ளார்.
நிஷா, நிதிஷ்குமார் மற்றும் மணிகண்டன் ஆகியோர், கணித பாடப்பிரிவில் மட்டும் படித்துள்ளனர்.
மற்றவர்கள், கணிதம், அறிவியல் இணைந்த பாடப்பிரிவில் படித்துள்ளனர். கீர்த்தனா ரவி, 'நீட்' நுழைவுத்தேர்வு எழுதவில்லை.
நீட் தேர்வு எழுதியதில், ரித்விக், 495; அப்துல் காதர், 483 என, அதிக மதிப்பெண் பெற்று உள்ளனர்.
நிதிஷ்குமார் என்ற மாணவர், ஐ.ஐ.டி., சேர்க்கைக்கான, 'ஜே.இ.இ., அட்வான்ஸ்டு' நுழைவு தேர்வு எழுதி, அதில், 738 மதிப்பெண் பெற்றுள்ளார்.
அவருக்கு, மும்பை, ஐ.ஐ.டி.,யில், எலக்ட்ரிக்கல் பிரிவில் இடம் கிடைத்து, சேர்ந்துள்ளார்.
இவர்களில், மாணவி யமுனாஸ்ரீயின் தந்தை சரவணன், சிவகங்கை மாவட்டம், வி.மலம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில், பொருளியல் ஆசிரியராக உள்ளார்.
இந்த மாணவி, எந்த டியூஷனுக்கும் செல்லாமல், பிளஸ் 2வில், 1,182 மதிப்பெண்ணும், 10ம் வகுப்பில், 497 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார்.
தமிழக அரசு பள்ளியை சேர்ந்த மாணவர் யாரும், 'டாப்பர்ஸ்' பட்டியலில் இடம்பெறவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக