📗📗நூலகங்களில் ஒரு மாதத்தில் 1.17 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

📗📗நூலகங்களில் ஒரு மாதத்தில் 1.17 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்*

தமிழகத்தில் உள்ள நூலகங்களில் ஒரே மாதத்தில் 1.17 லட்சம் பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, நூலகத் துறை மானியக் கோரிக்கை மீதான கேள்வி மற்றும் துணைக் கேள்விகளுக்கு

*🔴🔴அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில்*

தமிழகத்தில் உள்ள 345 முழுநேர நூலகங்கள் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றன.

ஒரு மாதத்துக்குப் பிறகு, அந்த நூலகங்களில் ஐ.ஏ.எஸ். அகாதெமி உருவாக்கி அதன் மூலமாக பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து நூலகத் துறைக்கு ஆண்டுதோறும் நிதி அளிக்கப்பட்டு வருகிறது.

இத்தொகையில் பாக்கி இருந்தாலும், அவற்றைத் தருவதற்கு உள்ளாட்சித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

*🔴🔴3 லட்சம் பேர் இலக்கு*

நூலகங்களில் 3 லட்சம் வாசகர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஒரு மாதத்தில் 1.17 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு ரூ.5 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

*🔴🔴நூல்களைத் தாருங்கள்*

நூலகங்களுக்கு யார் வேண்டுமானாலும் சிறந்த நூல்களைத் தரலாம். இவற்றை நூலகங்களில் பயன்படுத்த அரசு உத்தரவு வழங்கியுள்ளது.

எந்தெந்த நூல்களை அரசு நூலகங்களில் வைக்கலாம் என்பதைப் பரிசீலிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு பரிந்துரைக்கும் நூல்களை அரசு ஏற்றுக் கொள்ளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here