நிகர்நிலை பல்கலைகள் நடத்தும் மருத்துவ கல்லுாரிகளில், கணிசமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மாநில அரசு நியமித்துள்ள, கல்வி கட்டண நிர்ணய குழு, நிகர்நிலை பல்கலையில் இயங்கும் கல்லுாரிகளுக்கு, கட்டணம் எதுவும் நிர்ணயிக்கவில்லை.
எனவே, நிகர்நிலை பல்கலை நடத்தும் மருத்துவ கல்லுாரிகளுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்த, சமூக ஆர்வலரான, ஜவஹர்லால் சண்முகம் தாக்கல் செய்திருந்திருந்தார்.
இந்த மனுவை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி, பி.டி.ஆஷா அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்து, 'யு.ஜி.சி., அமைக்கும் கட்டண நிர்ணய குழு, விரிவான ஆய்வு மேற்கொண்டு, கல்வி கட்டணத்தை பரிந்துரைக்க வேண்டும். 'அதுவரை, தற்போது சேர்க்கப்படும் மாணவர்களிடம், ௧௩ லட்சம் ரூபாய், நிபந்தனை அடிப்படையில் பெறலாம்' என, இடைக்கால உத்தரவிட்டது.இவ்வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது.
யு.ஜி.சி., சார்பில், வழக்கறிஞர், பி.ஆர்.கோபிநாதன் ஆஜராகி, ''நிகர்நிலை பல்கலையில் இயங்கும் மருத்துவ கல்லுாரிகளில், கட்டணத்தை ஒழுங்குபடுத்த, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை முன்னாள் இயக்குனரான, பேராசிரியர் ஆர்.சி.தேக்கா தலைமையில், ௧௧ பேர் அடங்கிய குழுவை, யு.ஜி.சி., நியமித்துள்ளது.
''இக்குழு, கல்லுாரிகள், மாணவர்கள் என, சம்பந்தப்பட்டவர்களுடன் விவாதித்து, நான்கு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்,'' என்றார்.இதை பதிவு செய்து கொண்ட முதல் பெஞ்ச், வரும் அக்டோபருக்குள், கட்டண நிர்ணயம் செய்ய உத்தரவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக