அரசு மருத்துவ கல்லுாரி கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, மொத்தம், 5,657 இடங்கள் உள்ளன.
இதற்கு, 43 ஆயிரத்து, 935 பேர் விண்ணப்பித்து உள்ளனர். முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு, எம்.பி.பி.எஸ்., - 10; பி.டி.எஸ்., படிப்பில், ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
'இந்த ஒதுக்கீட்டில் இடங்களை பெற, முன்னாள் ராணுவ வீரரின் வாரிசு என்பதற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும்' என, மருத்துவ தேர்வு குழு தெரிவித்து உள்ளது.
இது குறித்து, மருத்துவ தேர்வு குழு வெளியிட்ட அறிவிப்பு:
விண்ணப்பத்தை அளித்த போது, மாவட்ட ராணுவ வீரர் வாரியத்தின் இணையதள சார்பு சான்றிதழை சமர்ப்பிக்காதவர்கள், வரும், 28ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், மருத்துவ மாணவர் தேர்வு குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் அளிக்காதவர்கள், இட ஒதுக்கீடு கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக