'இக்னோ' என்ற, இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலை படிப்பில் சேர, ஜூலை, 15 வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப் பட்டுள்ளது.
இக்னோ பல்கலையில், பள்ளி படிப்பை பாதியில் விட்ட, 18 வயதை தாண்டியோருக்கு, தொலைநிலையில், பட்டப்படிப்பு படிக்க வாய்ப்பு தரப்படுகிறது. முதலில், ஆறு மாதங்கள், பட்ட முன் தயாரிப்பு பயிற்சி தரப்படும்.
அதன்பின், பட்டப்படிப்புகளை தொடரலாம். இக்னோவில் பட்டப் படிப்பு, முதுநிலை, சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புகளில், நடப்பு கல்வி ஆண்டுக்கான சேர்க்கை துவங்கியுள்ளது.
சென்னையில், வேப்பேரியில் உள்ள, இக்னோ அலுவலகத்தில், விண்ணப்பங்கள் கிடைக்கும்.
மேலும், https://onlineadmission.ignou.ac.in என்ற இணையதளம் வாயிலாக, ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு, ஜூலை 15 வரை கால அவகாசம் உள்ளது என, இக்னோ மண்டல இயக்குனர், கிஷோர் அறிவித்துள்ளார்.மேலும், விபரங்களை, -rcchennai@ignou.ac.in என்ற, இ - மெயில் முகவரிக்கு கடிதம் எழுதியும், -044 - -2661 8438 மற்றும், 2661 8039 என்ற தொலைபேசி எண்களிலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக