சென்னை: தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 20 பேரின் குடும்பத்தினருக்கு ரூ 1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிகழ்ந்த துயர சம்பவங்களிலும், விபரீதங்களிலும் பொதுமக்கள் உயிரிழப்பதால் அவர்களது குடும்பம் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் இருப்பது துயரம் தருவது ஆகும். எனவே அவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவியும், நிதியுதவியுடன் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தருவது வழக்கமாகும்.
அந்த வகையில்தமிழகத்தில் பல்வேறு துயர சம்பவங்களில் உயிரிழந்த 20 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து 20 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக