2,248 பள்ளிகளில் ரூ 48.96 கோடி செலவில், மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்து உள்ளார்.
சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்த முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-
* டிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வுக்கான குறைந்தபட்ச வயது வரம்பு உயர்வு/வயது வரம்பு 35-லிருந்து 37-ஆக உயர்வு.
*கோயம்புத்தூரில் ரூ.100 கோடி செலவில் தகவல் தொழில்நுட்ப கட்டடம் கட்டப்படும்.
* திருச்சியில் ரூ.40 கோடியில் தகவல் தொழில்நுட்ப கட்டடம் கட்டப்படும்.
* கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 பாடப்பிரிவுகள் புதிதாக ஏற்படுத்தப்படும்.
* 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும்.
* ஈரோடு சத்தியமங்கலத்தில் ரூ 7 கோடி செலவில் கலாச்சார கிராமம் உருவாக்கப்படும்.
*காட்டுத் தீயை கட்டுப்படுத்த ரூ 2 கோடி செலவில் களப் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
* 2,248 பள்ளிகளில் ரூ 48.96 கோடி செலவில், மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக