தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை நாளைக்குள் (7-ம் தேதிக்குள்) தெரிவிக்குமாறு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர) சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர், விளிம்பு நிலையினர் உள்ளிட்டோருக்கு அறிமுக வகுப்புகளில் (எல்கேஜி, 1-ம் வகுப்பு) 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண் டும்.
*🔴🔴9 ஆயிரம் தனியார் பள்ளிகள்*
அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 9 ஆயிரம் தனியார் பள்ளிகளில் அறிமுக வகுப்புகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
இந்த இடங்களில் நடப்புக் கல்வியாண்டில் சேர 1 லட்சத்து 28 ஆயிரத்து 451 பேர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்த பள்ளிகளில் மே 28-ம் தேதி குலுக்கல் நடத்தப்பட்டு பள்ளிக் குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வுப் பட்டியலும் உடனடி யாக அந்தந்த பள்ளியின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடந்தது.
*ஜூன் 7-ம் தேதிக்குள்*
இந்நிலையில், 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை ஜூன் 7-ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு தனியார் பள்ளிகளுக்கு மாநில மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரும், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட மாநில தொடர்பு அலுவலருமான எஸ்.கண்ணப்பன் உத்தரவு பிறப் பித்துள்ளார்.
ஒருசிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விண்ணப்பித்து வெவ்வேறு பள்ளிகளில் இடம் கிடைத்திருக்கலாம்.
இதன்மூலம் ஏற்படும் காலியிடங்கள், காத்திருப்போர் பட்டியலில் இருப்போரைக் கொண்டு 2-வது கட்ட மாணவர் சேர்க்கை மூலம் நிரப்பப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக