சென்னை சட்ட பணிகள் ஆணையத்தின் செயலாளர் ஜெயந்தி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: மாணவர்கள் படிப்புக்காக கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாத நிலை அதிகமாக உள்ளது. மேலும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் எப்படி வங்கியை அனுகுவது என்றும் தெரியாத நிலையில் உள்ளனர்.
எனவே, இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக, உலகமயமாக்கப்பட்ட அனைத்து வங்கி அதிகாரிகளிடம் இதைப்பற்றி ஆலோசனை செய்துள்ளோம்
. அதில் வங்கி தரப்பு, கடன் பெற்ற மாணவர்களுக்கு உதவி செய்வதாக ஒப்புக்கொண்டனர்.
எனவே, முதன்முறையாக சென்னை மாவட்டத்தில் கல்வி கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் உள்ள மாணவர்களுக்கும், வங்கிகளுக்கு சுமுக தீர்வு ஏற்படுத்த, சென்னை மாவட்ட சட்ட பணிகள் ஆணையம் சார்பாக முதன்முறையாக கல்வி கடனுக்கான லோக் அதாலத் வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த லோக் அதாலத்தை மாணவர்கள் தவறாமல் பயண்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதில் கடனுக்கான வட்டியை குறைத்து தீர்வு காணப்படும். வங்கி அதிகாரிகளும் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எனவே, மாணவர்கள் தவறாமல் தாங்கள் பெற்ற கடன் குறித்த விவரங்களுடன் லோக் அதாலத்தில் காலை 10.30 மணிக்கு கலந்து கொண்டு பயண் பெறவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக