புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு இன்று(ஜூன் 3) நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் புதுச்சேரியில் உள்ள 150 இடங்களுக்கும், காரைக்கால் கிளையில் உள்ள 50 இடங்களுக்கும் நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. இதில் 54 இடங்கள் புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 130 நகரங்களில் உள்ள 291 மையங்களில் நடத்தப்படும் இந்தத் தேர்வை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 751 மாணவர்கள் இன்று எழுதுகின்றனர்.
காலை, மதியம் என இன்று இரண்டு கட்டங்களாக நடைபெறும் நுழைவுத் தேர்வில், புதுச்சேரியில் உள்ள 7 மையங்களில் 1,925 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். முதல் பிரிவு மாணவர்கள் காலை 10 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை ஆன்லைன் வாயிலாகத் தேர்வு எழுதினர். மற்றொரு பிரிவு மாணவர்களுக்குப் பிற்பகல் 3 மணிக்குத் தேர்வு தொடங்குகிறது. தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதிக்கு முன்னதாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வு நுழைவு சீட்டு மற்றும் ஆதார்கார்டு, இ-ஆதார்கார்டு, பாஸ்போர்ட் ஆகிய அடையாள அட்டைகளில் ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக