நாடு முழுவதும் இன்று முதல் (ஜூன் 3) சரக்குப் போக்குவரத்துக்கான ஆன்லைன் பில் கட்டாயமாகிறது. ஆன்லைன் பில்கள் உருவாக்கத்தால் சரக்குப் பொருட்கள் டெலிவரி செய்யும் நேரம் முன்பைக் காட்டிலும் குறையும் வாய்ப்புள்ளது.
நாடு முழுவதும் இன்று முதல் உள்மாநில சரக்குப் போக்குவரத்துக்கு ஆன்லைன் பில் முறை கட்டாயமாக்கப்பட உள்ளது. இதன்படி ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு 50,000 ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லப்படும் சரக்குப் பொருட்களுக்கு இன்றுமுதல் ஆன்லைன் பில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15ஆம் தேதி முதல் படிப்படியாக ஒவ்வொரு மாநிலமாக ஆன்லைன் பில் சரக்குப் போக்குவரத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் பில்களால் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் பொருட்களின் டெலிவரிக்கான காலம் 16 விழுக்காடு வரை குறையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. வரி ஏய்ப்பைத் தடுக்கும் விதமாகவும், வரி செலுத்துதலை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆன்லைன் பில் உருவாக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு கூறுகிறது.
எந்தத் தடுமாற்றமும் இன்றி நாள் ஒன்றுக்கு 75 லட்சம் ஆன்லைன் பில்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆன்லைன் பில் அமைப்பு முறை தேசிய தகவல் மையத்தால் (என்ஐசி) உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதலே ஜிஎஸ்டியில் வரி ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட பிறகு, வரி ஏய்ப்பைத் தடுக்கும் விதமாக ஜிஎஸ்டிஆர்-1 மற்றும் ஆன்லைன் பில் தகவல்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பணிகள் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக