சுவிஸ் வங்கி: இந்தியாவின் கறுப்புப் பணம் 50% உயர்வு! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சுவிஸ் வங்கி: இந்தியாவின் கறுப்புப் பணம் 50% உயர்வு!

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களால் முதலீடு செய்யப்படும் பணம் கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் 50% அதிகரித்திருக்கிறது. கடந்த மூன்று வருடங்களாக சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு குறைந்திருந்த நிலையில் 2017ஆம் ஆண்டு மிக அதிக அளவு உயர்ந்துள்ளது. இது இந்திய மதிப்பில் ஏழாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

கறுப்புப் பணத்தை எதிர்த்து இந்தியா கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக மத்திய அரசு சொல்லி வரும் நிலையில், சுவிஸ் தேசிய வங்கியின் வருடாந்திர புள்ளிவிவரங்கள் நேற்று (ஜூன் 28) வெளியிடப்பட்டன.

இதன்படி உலக அளவில் மொத்தம் சுவிஸ் வங்கியின் வெளிநாட்டு முதலீடுகள் 3% அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக இந்தியாவில் இருந்து மட்டும் 50% பண முதலீடு அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி 2017ஆம் ஆண்டு வாடிக்கையாளர்களின் முதலீடுகள் வழியாக 3,200 கோடி ரூபாயும், மற்ற வங்கிகளின் மூலமாக 1,050 கோடி ரூபாயும், நம்பகமானவர்கள் வாயிலாக 2ஆயிரத்து 640 கோடி ரூபாய் இந்திய பணமும் 2017ஆம் ஆண்டில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கு முன் 2011 ஆம் ஆண்டு 12% என்ற அளவிலும், 2013 ஆம் ஆண்டு இந்தியா நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருந்த நிலையில் 43% என்ற அளவிலும் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு உயர்ந்தது. ஆனால் 2017 ஆம் ஆண்டு சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் இந்திய பணம் 50.2% என்று அதிகரித்திருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னர் இந்திய, சுவிஸ் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி கறுப்புப் பணம் தொடர்பான விவரங்களை பகிர்ந்து கொள்ளுதல் தொடர்பாக இருநாடுகளுக்கு இடையிலும் புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. தவறான வழிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணம் என்பதற்கான ஆதாரங்களைத் தந்தால் முதலீடு பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட நாடுகளோடு பகிர்ந்துகொள்ளும் முறையை ஏற்கனவே சுவிஸ் கடைபிடித்து வந்தது. கறுப்புப் பண ஒழிப்பை தீவிரமாக்குவதன் அடுத்த கட்டமாக முதலீடுகள் பற்றிய தகவல்களை இந்தியாவுடன் தானாகவே பரிமாற்றிக் கொள்ளும் முறையைக் கொண்டுவந்தது சுவிஸ்.


.

ஓய்வுபெற்ற நீதிபதி எம்.பி. ஷா இக்குழுவின் தலைவராகவும் ஓய்வுபெற்ற நீதிபதி அரிஜித் பசாயத் இணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். மத்திய அரசின் வருவாய்த் துறை செயலர், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர், நேரடி வரி வருவாய் ஆணையத்தின் தலைவர், புலனாய்வுத்துறை டிஐஜி, அமலாக்கத்துறை இயக்குநர், சிபிஐ இயக்குநர், வருவாய் புலனாய்வுத்துறை இயக்குநர், நிதித்துறை புலனாய்வுப் பிரிவு, ரா பிரிவின் தலைவர்கள் என பல்வேறு அதிகாரிகள் இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்

கறுப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியலையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு.


பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகான 2017ஆம் ஆண்டில்தான் சுவிஸ் வங்கியில் இந்தியாவின் கறுப்புப் பண முதலீடு 50% அதிகரித்திருக்கிறது என்று சுவிஸ் தேசிய வங்கியே நேற்று அறிவித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here