இந்தியாவில் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, விவசாயம், நீர் ஆதாரங்கள் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் கடந்த மார்ச் முதல் மே வரை வளர்ச்சியடைந்த டெல்டா மாவட்டங்களின் பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.
இதில், குஜராத் மாநிலத்தின் தாகோத் மாவட்டம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியல் சுகாதாரம், கல்வி, வளர்ச்சி மட்டுமின்றி, பொருளாதாரச் சந்தையின் வளர்ச்சி அடிப்படையிலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சந்தை வளர்ச்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டமும், 10 இடங்களுக்குள் விருதுநகர் மாவட்டமும் இடம்பெற்றுள்ளன. இதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வளர்ச்சியடைந்துள்ள முதல் ஐந்து மாவட்டங்களில் ஆந்திராவின் விஜயநகரம், கடப்பா ஆகிய மாவட்டங்களும், மேற்கு சிக்கிம் (சிக்கிம்) மாவட்டமும் இடம் பெற்றுள்ளன. இதேபோன்று வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய டெல்டா மாவட்டங்களாக பீகாரின் பெகுசராய், காஹாடியா மாவட்டங்களும், ஐம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டமும், இடம்பெற்றுள்ளன. மேலும், ஜார்க்கண்டின் ராஞ்சி, சிம்தேகா ஆகியவையும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
இதுதொடர்பாக, நிதி ஆயோக் செயலதிகாரி அமிதாப் காந்த் கூறும்போது, “டெல்டா மாவட்டங்களில் பின்தங்கிய மாவட்டங்களை விரைவில் வளர்ச்சியடையச் செய்ய இந்தக் கணக்கீட்டுத் திட்டத்தை 2015ஜனவரி 1ஆம் தேதியில் பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்தார். அதன்படி, இதில் விரும்பி இணைந்த மாவட்டங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், சில மாவட்டங்கள் பங்கேற்கவில்லை, சில மாவட்டங்கள் தாமதமாகப் பங்கேற்றன. இதன்மூலம், தங்களது மாநிலத்தில் முதல் சிறந்த மாவட்டமாக விளங்குவதற்கும் ஊக்கமளிப்பதோடு, கூட்டாட்சிவாதத்தின் ஆற்றலில் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும் ஊக்கம் பெறுகின்றன” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக