இந்தியாவின் லேடி உசேன் போல்ட் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இந்தியாவின் லேடி உசேன் போல்ட்

தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஒடிசா வீராங்கனையான டுட்டீ சந்த், 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றதுடன் தனது முந்தைய தேசிய சாதனையைப் புதுப்பித்துள்ளார்.

58ஆவது சீனியர் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கவுஹாத்தி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஜூன் 29) நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் டேஷ் ஓட்டத்தின் அரையிறுதிப் போட்டியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான டுட்டீ சந்த் 11.29 வினாடிகளில் இலக்கைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு இந்தப் பிரிவில் அவர் 11.30 வினாடிகளில் இலக்கைக் கடந்திருந்ததே தேசிய சாதனையாக இருந்தது. இதன்மூலம் தற்போது டுட்டீ தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தகுதிபெற 100 மீட்டர் தூரத்தை 11.67 வினாடிகளில் கடக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. தற்போது இந்தச் சாதனையின் மூலம் டுட்டீ, ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இந்த வெற்றி குறித்து பேசிய டுட்டீ சந்த், "சூழ்நிலைகள் மிகச்சிறப்பாக இருந்தது. போட்டிக்கும் முன்பு நானும் என் பயிற்சியாளரும் தேசிய சாதனையை முறியடிக்கத் திட்டமிட்டோம். எனக்கு இது மிகவும் சந்தோஷம் தான் ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் இன்னும் நேரத்தைக் குறைக்க முயற்சி செய்வேன். 11.20 வினாடிகளில் இலக்கைக் கடப்பதே எனது லட்சியம். அதனை விரைவில் அடைவேன். ஆசிய போட்டிக்கு இன்னும் 8 வாரங்கள் உள்ளன. அதற்குள் என் இலக்கை நான் அடைந்து விடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

இத்தொடரின் இறுதிப் போட்டியில் 11.31 வினாடிகளில் இலக்கைக் கடந்த டுட்டீ சந்த் தங்கம் வென்று சாதித்துள்ளார். மணிப்பூரைச் சேர்ந்த ரங்கா (11.70 வினாடி) வெள்ளிப் பதக்கமும், கர்நாடகாவின் ரீனா ஜார்ஜ் (11.77 வினாடி) வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர் டேஷ் ஓட்டப் பிரிவில் இதுவரை ஒரு இந்திய பெண்மணி கூட தங்கப்பதக்கம் வென்றதில்லை. இந்தப் பிரிவில் ரோஷன் மிஸ்திரி (1951; வெள்ளி), கிறிஸ்டின் பிரவுன் (1954; வெண்கலம்), பிடி உஷா (1982; வெள்ளி), ரச்சிதா மிஸ்திரி (1998; வெண்கலம்) ஆகியோர் மட்டுமே பதக்கங்கள் வென்றுள்ளனர்.

டுட்டீ சந்த் சாதனை படைத்த வீடியோ: லிங்க்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here