18 ஆயிரம் ரூபாய் அடிப்படை ஊதியம் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, ஆகஸ்ட் 6ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் சென்னை விருகம்பாக்கத்தில் வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டை நேற்று (ஜூன் 24) நடத்தினர். அதில், பொதுவிநியோகத் திட்டத்துக்குக் கூடுதல் நிதி, பாக்கெட்டில் ரேஷன் பொருள்கள், ஸ்மார்ட் கார்டுகளில் உள்ள குறைபாடுகளை நீக்குவது, ஊழியர்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் அடிப்படை ஊதியமாக வழங்குவது உள்ளிட்ட 11 கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
மேலும், இந்த மாநாட்டில் ஜூலை 6ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவும், ஒருநாள் வேலைநிறுத்தம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இந்தக் கோரிக்கைகளை தமிழக அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றும் ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக